''இது ஹிந்து கலாசாரமா?'' 'காந்தாரா' படம் குறித்து சர்ச்சையாகப் பேசிய நடிகர் கைது!

காந்தார படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். 
''இது ஹிந்து கலாசாரமா?'' 'காந்தாரா' படம் குறித்து சர்ச்சையாகப் பேசிய நடிகர் கைது!

காந்தார படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி, தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள காந்தாரா என்ற கன்னட திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. 

வெறும் ரூ.17 கோடி பொருள் செலவில் உருவான இந்தப் படம் இந்திய அளவில் இதுவரை ரூ.170 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. கேஜிஎஃப் படத்தைத் தொடர்ந்து இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் அறியப்படும் கன்னடப் படமாக காந்தாரா இருக்கிறது. 

பூத கோலா என்ற நாட்டுப்புற நடனமாடும் தெய்வ நர்த்திகர்கள் படும் துயரத்தை இந்தப் படம் பதிவும் செய்திருந்தது. படம் குறித்து பேசிய இயக்குநர் ரிஷப் ஷெட்டி, பூத கோலா நடனம் இந்துக் கலாசாரத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டிருந்தார். அவரது பேச்சு பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது. 

கைது செய்யப்பட்டுள்ள நடிகர் சேத்தன் குமார்
கைது செய்யப்பட்டுள்ள நடிகர் சேத்தன் குமார்

ரிஷப் ஷெட்டியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக கன்னட நடிகர் சேத்தன் குமார் பேசியுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 

''பூத கோலா நடனம் ஆதிவாசிகளின் கலை. அந்தக் கலையை ஆதிவாசிகள் வழி வழியாக செய்து வந்திருக்கிறார்கள். இது ஹிந்து கலாசாரத்தில் இல்லை. 

ஹிந்து சமயம் இந்தியாவில் தோன்றியதற்கு முன்பே ஆதிவாசிகள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். மேலும் தொடர்ந்து ஹிந்தியையும் ஹிந்து மதத்தையும் திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று பேசியிருந்தார். இதனையடுத்து அவர் மீது கர்நாடக மாநில இந்து அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com