
சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் படம் இதுவரை ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விநியோகித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்களுக்கு இப்படம் நல்ல லாபத்தை கொடுத்துள்ளதாம்.
இதையும் படிக்க | ''உடல் சிலிர்த்தது'': 'காந்தாரா' படத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் விமர்சனம்
இதனையடுத்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் விடியோ காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளது.
சர்தார் படத்தில் கார்த்தியுடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.
#Sardar
— Prince Pictures (@Prince_Pictures) October 25, 2022
Once a spy, always a spy!
Mission starts soon!!#Sardar2 @Karthi_Offl @Prince_Pictures @RedGiantMovies_ @Psmithran @gvprakash @lakku76 @RaashiiKhanna @rajishavijayan @ChunkyThePanday @george_dop @AntonyLRuben @dhilipaction @kirubakaran_AKR @DuraiKv pic.twitter.com/rVu5IxGRZp