நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

'தளபதி 67' படத்துல நடிக்கிறீங்களா? : கார்த்தி என்ன பதில் சொன்னார் தெரியுமா?

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 67 படத்தில் நடிக்கிறீர்களா? என நடிகர் கார்த்தியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். 

News image
Updated On :26 அக்டோபர் 2022, 12:13 pm IST

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 67 படத்தில் நடிக்கிறீர்களா? என நடிகர் கார்த்தியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். 

நடிகர் கார்த்தியின் சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதி வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 

விருமன், பொன்னியின் செல்வன் படங்களுக்கு பிறகு இந்த ஆண்டில் நடிகர் கார்த்திக்கு சர்தார் 3வது வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இதனையடுத்து இயக்குநர் பி.எஸ்.மித்ரன், நடிகர் கார்த்தி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர். 

அப்போது கார்த்தி தனது படத்தின் அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றார். நடிகர் கார்த்தி அடுத்ததாக குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் கைதி 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு துவங்கும் என்றும் கார்த்தி தெரிவித்தார்.  அப்போது தளபதி 67 படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர், ''எனக்கு தெரியலைங்க. இதுல நிறைய பிரச்னைகள் இருக்கின்றன. அவ்வளவு சுலபமாக செய்திட முடியாது. காரணம் இரண்டு படங்களுக்கும் வேறு வேறு தயாரிப்பாளர்கள். அதனால் இரண்டு பேரிடமும் அனுமதி பெற வேண்டியிருக்கும். நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. நாம் ஆசைப்படலாம். தயாரிப்பாளர்கள் பேசி சரி செய்யவேண்டும் என்று பதிலளித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.