
கோப்ரா படக் காட்சி ஒன்று காப்பியடிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் விடியோ ஒன்று வைரலாகிவருகிறது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள கோப்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.
கடைசியாக விக்ரம் நடிப்பில் கடாராம் கொண்டான் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. 3 ஆண்டுகளுக்கு பிறகு திரையரங்குகளில் வெளியாகும் நடிகர் விக்ரமின் படம் என்பதால், கோப்ரா படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார்கள். அவர்களது எதிர்பார்ப்பை கோப்ரா பூர்த்தி செய்யவில்லை என்றே கூறப்படுகிறது.
இதையும் படிக்க | திருமண புகைப்படங்களைப் பகிர்ந்த விஜய் டிவி புகழ் - பிரபலங்கள் வாழ்த்து
இந்தப் படத்தில் விசாரணைக் காட்சி ஒன்றில் நடிகர் விக்ரமின் நடிப்பு விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்றது. அந்தக் காட்சியில் ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரது உடல்மொழியை விக்ரம் மாற்றி மாற்றி பேசி கலக்கியிருப்பார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இந்தக் காட்சி காப்பியடிக்கப்பட்டதாக விடியோ ஒன்று வைரலாகிவருகிறது. இன்சைட் என்ற குறும்படத்தில் இடம்பெற்ற அந்த காட்சியிலும் நடிகர் தன்னை சுற்றி உள்ள நபர்களைப் போல உடல் மொழியை மாற்றி மாற்றி பேசுகிறார். தற்போது இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகிவருகிறது.
pic.twitter.com/NeUxFfrV3N
— Manobala Vijayabalan (@ManobalaV) August 31, 2022
Nice Interrogation