
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தனது திருமணப் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். இவருக்காகவே அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் ஏராளம். தற்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக சில படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கிறார்.
மேலும் ஜூ கிப்பர் என்ற படத்தில் தற்போது ஹீரோவாகவும் நடித்துவருகிறார். இந்த நிலையில் அவருக்கும் பென்ஸியா என்பவருக்கும் இன்று (செப்டம்பர் 1)திருமணம் நடைபெற்றது. இருவரும் நீண்ட நாட்களாக காதலித்துவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | இசைஞானியும் இசைப்புயலும் ஒன்னா சேர்ந்தா...! - ரஹ்மான் பகிர்ந்த விடியோ
இதனையடுத்து புகழ் தனது திருமண புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யாரையாவது திருமணம் செய்து மஸ்டர் அண்ட மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை லட்சியமாக கொண்டிருப்பதாக நகைச்சுவையாக தெரிவிப்பார். தற்போது அவருக்கு திருமணம் முடிந்துள்ளதால் விரைவில் மனைவியுடன் அந்த நிகழ்ச்சியில் எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
— Pugazh (@pugazh_iam) September 1, 2022