
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாக உள்ள புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஷ்ணு விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான ‘எஃப்ஐஆர்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து, ’மோகன் தாஸ்’ ‘கட்டா குஸ்தி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: சிம்பு ஆனந்தக் கண்ணீர் விடுவதைப் பார்க்க வேண்டும்: கமல்ஹாசன்
இந்நிலையில், விஷ்ணு விஷால் இயக்குநர் கௌதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரவீண் இயக்கத்தில் ’ஆர்யன்’ என்கிற புதிய கிரைம் திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
இப்படத்தில், செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வாணி போஜன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
தயாரிப்பு - விஷ்ணு விஷால்

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...