கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வாழ்க்கைத் துணையா இருப்பீங்களா? - அமீரிடம் அழகாக காதலை வெளிப்படுத்திய பாவனி

அமீரின் காதலை பாவனி ஏற்றுக்கொள்வதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். 

News image
Updated On :5 செப்டம்பர் 2022, 11:22 am

DIN

அமீரின் காதலை பாவனி ஏற்றுக்கொள்வதாக இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ளார். 

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நேற்று (செப்டம்பர் 4) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவ்னி வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே அமீர் பாவ்னியிடம் தன் காதலை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தார். ஆனால் அதற்கு பாவ்னி ஒப்புக்கொள்ளவில்லை. பிக்பாஸில் பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்தது பரபரப்பாக பேசப்பட்டது. 

பிக்பாஸ் ஜோடிகளில் அமீர் மற்றும் பாவனி துவக்கம் முதலே தங்களது நடனத் திறமையால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தனர். ஒவ்வொருமுறையும் நடுவர்களான ரம்யா கிருஷ்ணனும் சதிஷும் இருவரையும் பாராட்டத் தவறுவதில்லை. 

இந்த நிலையில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்ஸ்டாகிராம் பதிவில் விஜய் டிவி, நடுவர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், அமிர் குறித்து பாவனி குறிப்பிட்டிருப்பதாவது, ''நடனம் எனக்கு மிக சவாலான விஷயம். அதுவும் போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என்பது பயம் அளிக்கக்கூடியது.

Story image

ஆனால் நீங்கள் ஒரு சிறந்த மாஸ்டர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். நடனமாடத் தெரியாதவரை நடனமாட வைத்து வெற்றிபெறச் செய்வது எப்படி என உங்களுக்கு தெரியும்.  

இந்த பயணத்தில் ஒவ்வொரு தருணத்தையும் வாழ்க்கை முழுவதும் நினைவில் கொள்வேன். உங்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன். உங்களிடம் நிறைய கற்றுக்கொண்டேன்.

நீங்கள் மனதளவில் மிக அழகான மனிதர். நீங்கள் சிறந்த மாஸ்டர், சிறந்த நடனக் கலைஞர், சிறந்த நண்பர். இப்பொழுது வாழ்க்கை பயணத்தை ஒன்றாக துவங்கலாமா ? என் வாழ்க்கைத் துணையாக இருங்கள். எப்பொழுதும் நீங்கள் எனக்காகத்தான். நான் உங்களைக் காதலிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.