
நடிகைகள் பிரியாமணி, ஜெனிலியாவுடன் தனுஷ் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனையடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'நானே வருவேன்' திரைப்படம் இந்த மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தின் முதல் பாடல் நாளை (செப்டம்பர் 7) வெளியாகிறது.
இதையும் படிக்க | நம்புங்கள் ! - 25 ஆண்டுகள் திரைப்பயணம் குறித்து சூர்யா உருக்கம்
இந்த நிலையில் தனுஷ், பிரியாமணி, ஜெனிலியா, ஜெனிலியாவின் கணவரும் நடிகருமான ரித்தேஷ் ஆகியோர் இடம்பெற்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ஜெனிலியாவுடன் இணைந்து 'உத்தமபுத்திரன்' படத்திலும், பிரியாமணியுடன் இணைந்து 'அது ஒரு கனாக்காலம்' படத்திலும் தனுஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.