ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

விஜய் டிவி தொடரைப் பார்த்து நடிகையை வியந்து பாராட்டிய அனுஷ்கா - சுவாரசியத் தகவல்

விஜய் டிவி தொடரைப் பார்த்த நடிகை அனுஷ்கா அந்தத் தொடரின் நாயகியை அழைத்து பாராட்டியுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Published On :1 பிப்ரவரி 2024, 3:48 pm IST

விஜய் டிவி தொடரைப் பார்த்த நடிகை அனுஷ்கா அந்தத் தொடரின் நாயகியை அழைத்து பாராட்டியுள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருபவர் அனுஷ்கா. குறிப்பாக பாகுபலி படத்தில் தேவசேனையாக கலக்கினார். பாகுபலி மூலம் அவருக்கு இந்திய அளவில் புகழ் வெளிச்சம் கிடைத்தது. 

கமர்ஷியல் படங்களில் நாயகர்களுடன் பாடல்களுக்கு மட்டும் நடனமாடி செல்வது மட்டுமல்லாமல் தனி கதாநாயகியாகவும் கலக்கினார். குறிப்பாக அருந்ததி, ருத்ரமாதேவி, பஞ்சமுகி போன்ற படங்களில் அவரது நடிப்பை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

கடைசியாக அனுஷ்கா நடிப்பில் நிசப்தம் திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னைத் தொடும் தொடரின் நாயகி பவித்ரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுஷ்கா குறித்து பதிவிட்டுள்ளார். 

Story image

அதில், எனக்கு நடிகை அனுஷ்காவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இது உண்மையா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. தென்றல் வந்து என்னைத் தொடும் தொடரில் என் நடிப்பை அவர் பாராட்டினார். மேலும் இந்தத் தொடரை அவர் தொடர்ந்து பார்ப்பதாகவும் தெரிவித்தார். மிகவும் அயர்ச்சியாக இருந்த தருணத்தில் அனுஷ்கா அழைத்து பேசியது புத்துணர்வை அளித்தது என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.