''இது ஒருவிதமான மனநோய்'' - பிரியா பவானி ஷங்கர் கடுமையான விமர்சனம்

நீயா நானா நிகழ்ச்சி குறித்து நடிகை பிரியா பவானி ஷங்கரின் பதிவு வைரலாகிவருகிறது. 
''இது ஒருவிதமான மனநோய்'' - பிரியா பவானி ஷங்கர் கடுமையான விமர்சனம்

நீயா நானா நிகழ்ச்சி குறித்து நடிகை பிரியா பவானி ஷங்கரின் பதிவு வைரலாகிவருகிறது. 

பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் ஹாஸ்டல், யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. குறிப்பாக  தனுஷுடன் இவர் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது ஜெயம் ரவியுடன் இணைந்துள்ள அகிலன், ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடித்துள்ள ருத்ரன், எஸ்.ஜே.சூர்யாவுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ள பொம்மை ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளன. மேலும் சிம்பு, கௌதம் கார்த்திக்குடன் இணைந்து பத்து தல, கமல்ஹாசனின் இந்தியன் 2 போன்ற படங்களில் நடித்துவருகிறார். 

சமூகத்தின் முக்கிய பிரச்னைகள் குறித்து அவ்வப்போது குரல் கொடுத்துவருகிறார். இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு கணவரின் இயலாமையை அவரது மனைவி குறையாக கூறும்போது, அறியாமை தவறில்லை என அவருக்கு ஆதரவாக நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் பரிந்துபேசுவார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியதன் விளைவாக  கோபிநாத்தின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.

இதனையடுத்து நடிகை பிரியா பவானி ஷங்கர், ''ஒருத்தர இகழ்ந்து அதை நகைச்சுவைன்னு நினைச்சு சிரிக்கறது ஒருவிதமான மனநோய். உங்க பார்வையும் பேச்சும் திருப்தியா இருந்துச்சு கோபி அண்ணா. வெற்றிக்கு இங்க ஆயிரம் இலக்கணம் வச்சிருக்காங்க. ஆனா ஒரு அப்பா என்னைக்குமே தோற்கமுடியாது! அவரது வெற்றிய அங்கீகரிச்சதுக்கு வாழ்த்துகள்!'' என்று குறிப்பிட்டுள்ளார். 

இதுதொடர்பாக தொகுப்பாளர் டிடி தனது பதிவில், ''நம்பிக்கையாக பேசும் மகள், பெற்றோரின் நல்ல வளர்ப்புக்கு உதாரணம்.  எந்த பட்டப்படிப்பும் இதனைக் கற்றுக்கொடுக்காது. இந்த மாதிரி பெற்றோர் கிடைக்க ஆசிர்வதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com