
தமன்னாவின் பப்ளி பௌன்சர் படத்திலிருந்து பித்து பிடிச்சி எனும் விடியோ பாடல் வெளியாகியுள்ளது.
மதுர் பண்டார்கர் இயக்கியுள்ள இந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் செப்டம்பர் மாதம் 23 ஆம் நாள், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் சௌரவ் சுக்லா, அபிஷேக் பஜாஜ், ஷகீல் வைத் ஆகியோரும் நடித்திருக்கின்றனர்.
சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியானது. தற்போது படத்தின் பித்து பிடிச்சி எனும் விடியோ பாடல் வெளியாகியுள்ளது.