
கமல்ஹாசன் விக்ரம் படத்தை பார்த்த ரசிகருக்கு உலக சாதனை விருது அளிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் விக்ரம் படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இந்தப் படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜீ5 என இரண்டு ஓடிடி தளங்களில் வெளியாகியிருக்கிறது.
அந்த அளவுக்கு 'விக்ரம்' ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் உலக அளவில் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க | வசூலைக் குவிக்கும் ‘வாரிசு’ வியாபாரம்: ஓடிடி விற்பனை இத்தனை கோடிகளா?
இதற்கு பெரும்பாலான ரசிகர்கள் விக்ரம் படத்தை திரையரங்குகளில் இரண்டுக்கும் மேற்பட்ட முறை பார்த்தது ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விக்ரம் படம் பார்த்த ரசிகர் ஒருவருக்கு உலக சாதனை விருது அளிக்கப்பட்டுள்ளது.
உதய பாரதி என்ற அந்த ரசிகர் விக்ரம் படத்தை திரையரங்குகளில் 50 முறை பார்த்திருக்கிறார். இதனையடுத்து லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அவருக்கு பதக்கமும், சான்றிதழமும் அளித்து கௌரவித்துள்ளது. இதனையடுத்து கமல்ஹாசன் ரசிகர்கள் உதய பாரதிக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.