உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படக்குழுவினர் நடிகர் வடிவேலுவின் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.
நடிகர் வடிவேலு தனக்கென தனித்துவமான உடல் மொழி, வசன உச்சரிப்பு மூலம் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர். நாம் சாதாரணமாக
பேசும்பொழுதே 'வேணாம்.. வலிக்குது... அழுதுருவேன்... என்னா அடி! இப்பவே கண்ணக்கட்டுதே' என சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவரது வசனங்களைத் தான் பேசுகிறோம்.

அந்த அளவுக்கு அவர் நம் வாழ்க்கையோடு இரண்டர கலந்துவிட்டார். கடந்த சில ஆண்டுகளாக அரசியல் காரணங்களால் நடிப்பதைக்
குறைத்துக்கொண்டாலும் தொலைக்காட்சிகள், சமூக வலைதள மீம்ஸ்கள் என இன்றும் அவர் இல்லாமல் நம் நாள் முடிவுக்கு வராது.

இதையும் படிக்க | ராஜமௌலி - மகேஷ் பாபு இணையும் படம் எப்படி இருக்கப்போது தெரியுமா ?


தற்போது மீண்டும் முழு வீச்சில் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கியிருக்கிறார் வடிவேலு. சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நாயகனாக நடிக்கும் வடிவேலு அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு குணச்சித்திர வேடமாம்.
இந்த நிலையில் நடிகர் வடிவேலுவின் பிறந்த நாளை மாமன்னன் படக்குழுவினர் கேக் வெட்டிக்கொண்டாடினர். அப்போது அவருடன் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் போன்றோர் உடனிருந்தனர்.
பிறந்த நாள் புகைப்படங்களை நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவுபெற்றதாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உ.பி.யில் தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் வன்முறை
சட்டப்பேரவைத் தேர்தல்! டாஸ்மாக் கடைகளுக்கு எத்தனை நாள்கள் விடுமுறை?

”பாட்ட அமத்துங்க!” பிரசாரத்திற்கு நடுவே நுழைந்த தவெக ஆட்டோவை கண்டித்த திலகபாமா!
விரைவில் வெளியாகும் ஏழுகடல் ஏழுமலை!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


