
பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக நடிகர் விக்ரம் வைத்த கோரிக்கையை கார்த்தி மறுத்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வருகிற 30 ஆம் தேதி வெளியாகும் நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர்.
முன்னதாக, பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதையும் படிக்க | திரிஷாவைத் தொடர்ந்து பெயரை மாற்றிய விக்ரம்!
இந்த நிலையில் , படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் ''சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான். என்ன நண்பா, வருவாய் தானே? அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!'' என்று நடிகர் கார்த்தியை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
அதற்கு நடிகர் கார்த்தி, “இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. எனக்கு காய்ச்சல் அதனால் வரமுடியாது. விடியோ காலில் இளவரசியிடம் பேசி மன்னிப்புக் கேட்கிறேன். தயவு செய்து என்னை மன்னியுங்கள்” என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
இதையும் படிக்க | ‘படம் பார்ப்பதற்கு முன்...’ ரசிகர்களுக்கு கௌதம் மேனன் கோரிக்கை
பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக கார்த்தியும் அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், குந்தவையாக திரிஷாவும் நடித்துள்ளனர். இதில் விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா ஆகியோர் சகோதர, சகோதரிகளாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
à®à®³à®µà®°à®à¯ à®à®à¯à®à®³à¯à®à¯à®à®¾à® தà®à¯à®à¯ à®®à¯à®¤à®²à¯ லà®à¯à®à¯ வர௠à®à¯à®©à¯à®± à®à®³à¯à®ªà¯à®ªà¯ à®à®©à¯à®©à¯à®®à¯ பà¯à®à®µà®¿à®²à¯à®²à¯. As I am suffering from fever I want work from home. வà¯à®à®¿à®¯à¯ à®à®¾à®²à®¿à®²à¯ à®à®³à®µà®°à®à®¿à®¯à®¿à®à®®à¯ பà¯à®à®¿ sorry à®à¯à®²à¯à®²à®¿ விà®à¯à®à®¿à®±à¯à®©à¯. Pls excuse me. pic.twitter.com/ak7Do9yBrK
â Actor Karthi (@Karthi_Offl) September 13, 2022
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







