வெந்து தணிந்தது காடு படத்துக்கு மாறன் அளித்துள்ள விமர்சனம் குறித்து கோபமாக பதிவு செய்துள்ளார்.
இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' படம் கடந்த 18 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. படம் மெதுவாக நகர்வதாக ஒரு சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
அந்த வகையில் ப்ளூ சட்டை மாறன் 'வெந்து தணிந்தது காடு' படத்தைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்த நிலையில் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த கௌதம் மேனன் ப்ளூ சட்டை மாறன் மீதான தனது கோபத்தைப் பதிவுசெய்துள்ளார்.
கௌதம் மேனன் பேசியதாவது, ''சொல்லக்கூடாதுனு நினைக்கிறேன். எனக்கு பயங்கர கடுப்பு. ஒரு படத்தை கலாய்த்து விமர்சனம் செய்வது, அவரது யூடியூப் பக்கத்தில் நிறைய பார்வையாளர்கள் பார்ப்பதற்கும், அதன் மூலம் அவருக்கு நிறைய விளம்பரங்கள் கிடைப்பதற்காகவும்தான்.
நீங்கள் விமர்சனம் பண்ணுங்கள். ஆனால் படத்தை கலாய்க்காமல் பண்ணுங்கள். அவருடைய திருச்சிற்றம்பலம் விமர்சனமே படத்தை முதல் 10 நிமிடங்கள் கழுவி ஊற்றுகிறார். நடுவில் ஒரு இடத்தில் படம் நன்றாக இருக்கிறது என்கிறார். அவர் மீது இறங்கி எதாவது செய்யலாமா என்ற அளவுக்கு கோபம் வருது'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஐடி பங்குகள் தொடர் விற்பனையால் சென்செக்ஸ் 607 புள்ளிகளுடனும், நிஃப்டி 155 புள்ளிகள் சரிவு!

ஆந்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக கண்டெடுப்பு

தில்லி கேபிடல்ஸின் பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்!

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் முதல் பாடல்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



