
சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த நிலையில் சமந்தாவுக்கு சரும பிரச்னை ஏற்பட்டிருப்பதாகவும் இதற்காக சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்கா செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியைடைய செய்துள்ளது.
இந்தத் தகவலை சமந்தாவின் மேலாளர் மறுத்துள்ளார். ஆனால் சமந்தா எதற்காக அமெரிக்கா செல்கிறார் என்பது குறித்து அவர் விளக்கமளிக்கவில்லை. இந்த நிலையில் சமந்தா நடித்துவரும் குஷி படத்தின் படப்பிடிப்பு தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிக்க | பிரபல ஹிந்தி நகைச்சுவை நடிகர் மரணம் - பிரபலங்கள் இரங்கல்
சமந்தாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன் முகத்தில் ஏற்பட்ட சரும பிரச்னை காரணமாக சிகிச்சை எடுத்துக்கொண்டார். இதன் காரணமாக அவர் ஷங்கரின் ஐ, மணிரத்னத்தின் கடல் பட வாய்ப்புகளை அவர் இழக்க நேரிட்டது.
தி ஃபேமிலி மேன் 2, புஷ்பா பட ஓ அண்டாவா பாடல் மூலம் இந்திய அளவில் சமந்தா பிரபலமாகியிருக்கிறார். காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாக சைதன்யாவுடனான விவகாரத்து தொடர்பாக பேசியது மிகவும் வைரலானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.