
ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கும் சொப்பன சுந்தரி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
"லாக்கப்' படத்தை இயக்கிய எஸ். ஜி. சார்லஸ் எழுதி இயக்குகிறார். தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான், தென்றல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை சரத்குமார் கவனிக்க, கலை இயக்கத்தை ரவி பாண்டியன் மேற்கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு அஜ்மல் மற்றும் சிவாத்மிகா இசையமைத்துள்ளனர். டார்க் காமெடி பாணியில் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது.
சொப்பன சுந்தரி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளை தொடங்கியுள்ள படக்குழுவினர் படம் விரைவில் வெளியாகுமென தெரிவித்துள்ளனர்.
#SoppanaSundari Shoot Wrapped up Successfully today Post Production Works on full Swing #SoppanaSundari Coming to Theaters Veryyy Soonnnn@aishu_dil @LakshmiPriyaaC #deepa #Karunakaran @mimegopi @dancersatz #Sunil @Bjornsurrao @SGCharles2 @HueboxS @proyuvraaj pic.twitter.com/XY56cYEE8Y
— Hamsini Entertainment (@Hamsinient) September 23, 2022