வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை அதன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், கமல்ஹாசன் பாணியில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் வசூலில் குறைவைக்கவில்லை. படம் வெளியான முதல் நான்கு நாள்களிலேயே ரூ.50 கோடிகளுக்கு மேலாக வசூலித்ததாக தகவல் வெளியானது. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே. கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.
ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சித்தார்த்தா நுனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார். இந்த நிலையில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு ரூ.92 லட்சம் மதிப்புள்ள காரையும், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக்கையும் பரிசளித்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

முன்னதாக விக்ரம் திரைப்படம் வெற்றி பெற்றதால் அதன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோருக்கு நடிகர் கமல்ஹாசன் பரிசுகளை வழங்கி மகிழ்வித்தார். தற்போது அதே பாணியில் தன்னுடைய படத்தின் வெற்றியையும் ஐசரி கணேஷ் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் சிக்கிய கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

நீட் போராட்ட மாணவா்கள் மீதான வழக்குகளைக் கைவிடலாம்: மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

சாயல்குடியில் 275 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; 4 போ் கைது

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தம்பதி உயிரிழப்பு
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



