’பாகுபலி மாதிரி இருக்காது..’ பொன்னியின் செல்வன் குறித்து மணிரத்னம்

’பாகுபலி மாதிரி இருக்காது..’ பொன்னியின் செல்வன் குறித்து மணிரத்னம்

பொன்னியின் செல்வன் திரைப்படம் பாகுபலியைப் போன்றது அல்ல என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் பாகுபலியைப் போன்றது அல்ல என இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் - ஜெயமோகன், இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் - ரவி வர்மன், கலை - தோட்டா தரணி. பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது.

படத்தின் முதல் காட்சி இன்று காலை 4.30 மணிக்கு திரையிடப்பட்டது. அதிகாலை முதலே தியேட்டர் வளாகத்தில் குவிந்த ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்கள் வைத்து, மேள தாளத்துடன் கொண்டாடினர். 

படத்தின் விமர்சனங்களும் நேர்மறையாக இருப்பதால் மிகப்பெரிய வணிக வெற்றியை இப்படம் அடையும் என விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அதில் ‘ராஜராஜசோழன் தமிழகத்தின் மிகப்பெரிய மன்னர். அவரைப் பற்றி படம் எடுக்கும்போது நேர்மையான பதிவாக  இருக்க வேண்டும் என நினைத்தோம். அதனால், பொன்னியின் செல்வன் திரைப்படம் மிக எதார்த்தமாக உருவாக்கப்பட்டது. வந்தியத்தேவனின் பார்வையில் விரியும் இக்கதையில் முழுவதும் நம்பும்படியாக, கடந்த காலத்திற்குச் சென்றால் எப்படி இருக்குமோ அப்படி யதார்த்த பாணியில் படமாக்கப்பட்டுள்ளது. பாகுபலியைப்போல பெரிய பிரமாண்டங்களும் முழுச் சுதந்திரமும்  ஃபேண்டசிகளும் இதில் இல்லை. இவை, இரண்டும் வரலாற்றுப் படங்களாக இருந்தாலும் வேறுவேறானவை’ எனக் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com