நடிகர் சந்தானம் மீண்டும் பேய் படம் ஒன்றில் நடித்து முடித்துள்ளார்.
நாயகனாக சந்தானம் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதற்கு முன் வெளியான ‘சபாபதி’ படமும் சரியாக கைகொடுக்கவில்லை.
இதனால், அவர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நகைச்சுவை பேய் படமான ‘தில்லுக்கு துட்டு’ படம்போல் மீண்டும் ஒரு பேய் படத்தில் நடித்துள்ளார்.
பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு ‘டிடி ரிட்டன்ஸ்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் பெயர் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.