முக்கிய சீரியலில் இருந்து விலகும் ரி்த்திகா!

முக்கிய சீரியலில் இருந்து பாக்கியலட்சுமி புகழ் ரி்த்திகா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய சீரியலில் இருந்து விலகும் ரி்த்திகா!

முக்கிய சீரியலில் இருந்து பாக்கியலட்சுமி புகழ் ரி்த்திகா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத் திரை தொடர்களில், பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. 

ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஸ்ரீமோயி' என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு உருவாக்கமாக பாக்கியலட்சுமி தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த தொடரில் கோபியின் இரண்டாவது மனைவியான ராதிகா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா நடித்து வருகிறார். ரித்திகா நடிக்கும் அமிர்தா கதாபாத்திரத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், ஜி தமிழ் தொலைக்காட்சியில் மிர்ச்சி செந்தில் நடிக்கும் அண்ணா தொடரில் தங்கை கதாபாத்திரத்தில் ரித்திகா ஒப்பந்தமாகி இருந்தார். இன்னும் ஒளிப்பரப்பாகாத அந்த தொடரில் ரித்திகா விலகிவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரித்திகா ஏன் விலகினார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ரித்திகாவுக்கு பதில் பொன்னி தொடர் நாயகி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com