மராத்தி படங்களில் அறிமுகமான நடிகை மிருணாள் தாக்குர் தமிழ் ரசிகர்களுக்கு சீதா ராமம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த இந்தத் திரைப்படம் பான் இந்தியப் படமாக வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது.
இதற்கடுத்து லஸ்ட் ஸ்டோரிஸ் 2 தொடரில் நடித்தும் மிருணாள் தாக்குர் புகழ் பெற்றார். தற்போது ஹிந்தி, தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக இவரை நடிக்க பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம்!
அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக அறியப்பட்டார் விஜய் தேவரகொண்டா.
இதையும் படிக்க: டிடி ரிட்டன்ஸ் - 4 நாள் வசூல் இவ்வளவா?
வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பரசுராம் பெட்லா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் மிருணாள் தாக்குர் நடிக்கின்றனர். 2018இல் வெளியாகி அமோக வரவேற்பினை பெற்ற கீதா கோவிந்தம் படத்தினை இயக்கியவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஸ்தான இசையமைப்பாளர் கோபி சுந்தரும் இந்தப் படத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படக்குழுவுடன்தான் மிருணாள் தாக்குர் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். படக்குழு நம்பமுடியாத திறமை மற்றும் அழகான நடிகை என வாழ்த்துப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.