
அங்காடி தெரு திரைப்படத்தில் நடித்த துணை நடிகை சிந்து இன்று அதிகாலை காலமானார்.
வசந்தபாலன் இயக்கத்தில் மகேஷ், அஞ்சலி நடித்த அங்காடி தெரு படத்தில், துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சிந்து(வயது 42).
இவர், பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த சிந்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிக்க | மாவீரன் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
இவரது மறைவுக்கு பல்வேறு துணை நடிகர்களும், சினிமா ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.