கார்த்திக்கு வில்லனாக சத்யராஜ்!

நடிகர் கார்த்தி நடித்து வரும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக சத்யராஜ் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக்கு வில்லனாக சத்யராஜ்!

நடிகர் கார்த்தி நடிப்பில் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன்  படங்கள் வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்றது.

அதன்பின், ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இது கார்த்தியின் 25-வது படமாகும்.

தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். 

இந்நிலையில், இப்படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிகர் சத்யராஜ் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com