
மார்க் ஆண்டனி படத்தின் 2வது பாடல் ஆதிக் ரவிச்சந்திரன் குரலில் வெளியானது.
நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு(செப்.15) மார்க் ஆண்டனி படம் வெளியாக உள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ‘அதிருதா’ பாடல் கடந்த ஜூலை 15 ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் 2வது பாடலான ‘ஐ லவ் யூ டி’ பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியானது. இப்பாடலை ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ரோஷினி பாடியுள்ளனர்.
இதையும் படிக்க: புனித் மறைந்ததும் இதைத்தான் நினைத்துக்கொண்டேன்: சிவ ராஜ்குமார்
பாடல் வரிகளை ரோக்கேஷ் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதியுள்ளனர். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.