படப்பிடிப்பின்போது... விடியோ பகிர்ந்த சின்னத்திரை நடிகை!

படப்பிடிப்பின்போது... விடியோ பகிர்ந்த சின்னத்திரை நடிகை!

மீனா தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிப்பவர் நடிகை இந்து செளத்ரி. இவர் இதற்கு முன்பு ஆனந்த ராகம் தொடரில் நடித்து மக்களிடையே வரவேற்பைப் பெற்றவர். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மீனா தொடரில் நடித்துவரும் நடிகை இந்து செளத்ரி சமூக வலைதளத்தில் விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 

சன் தொலைக்காட்சியில் பகல் நேரங்களில் அதிக எண்ணிக்கையில் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் மீனா தொடர் ஜூலை இறுதியிலிருந்து ஒளிபரப்பாகி வரும் புதிய தொடராகும்.

மீனா தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிப்பவர் நடிகை இந்து செளத்ரி. இவர் இதற்கு முன்பு ஆனந்த ராகம் தொடரில் நடித்து மக்களிடையே வரவேற்பைப் பெற்றவர். 

இந்துவுக்கு ஜோடியாக ஜெய் சீனிவாசா குமார் நடித்து வருகிறார். இவர் இலக்கியா தொடரில் நடித்தவர். 

மக்களிடம் பரீட்சயமான இருவர் முதன்மை பாத்திரத்தில் நடிப்பதால், இந்தத் தொடருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில், இந்தத் தொடரின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட விடியோவை நடிகை இந்து செளத்ரி பகிர்ந்துள்ளார்.

அதில் ஆபத்தில் சிக்கிய குழந்தைகளைக் காப்பாற்றும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அந்த சிறிய காட்சிக்கு படக்குழு மேற்கொள்ளும் சிரமங்களைக் குறிப்பிடும் வகையில், இந்த விடியோவை இந்து செளத்ரி பகிர்ந்துள்ளார். இந்த விடியோவுக்கு பலர் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com