விமல் நடிப்பில் உருவாகியுள்ள துடிக்கும் கரங்கள் படத்தின் டிரைலர் வெளியானது.
கடந்த சில ஆண்டுகளாக விமல் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில், அதன் பிறகு அவர் நடித்த விலங்கு வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது, விமல் நடிப்பில் ஆக்ஷன் திரில்லராக படமாக உருவாகி உள்ள திரைப்படம் துடிக்கும் கரங்கள். இதில் விமலுக்கு ஜோடியாக மும்பை மாடல் மனிஷா நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குநர் வேலு தாஸ் இயக்கியுள்ளார்.
மேலும், இப்படத்தில் சதிஷ், சுரேஷ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராகவ் பிரசாத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படிக்க: திரைப்படமாகிறது நான்குனேரி சம்பவம்!
இந்த நிலையில், துடிக்கும் கரங்கள் படத்தின் டிரைலர் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.