சுந்தரி 2 ஆம் பாகத்தில் நடிக்கும் பிரபலம் யார்?

சுந்தரி 2 ஆம் பாகத்தில் நடிக்கும் பிரபலம் யார்?

சுந்தரி 2 ஆம் பாகத்தில் தாலாட்டு தொடரில் நடித்த நடிகர் கிருஷ்ணா நடிக்கவுள்ளார்.
Published on

சுந்தரி 2 ஆம் பாகத்தில் தாலாட்டு தொடரில் நடித்த நடிகர் கிருஷ்ணா நடிக்கவுள்ளார்.

சுந்தரி தொடர் 2021 பிப்ரவரி முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. அழகர் இயக்கும் இந்தத் தொடரில் கேப்ரியல்லா முதன்மைப் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜிஸ்னு மேனன் நடிக்கிறார். 

கருப்பு நிறத்திலுள்ள கிராமத்துப்பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி மறுமணம் செய்துகொள்ளும் கணவன் முன்பு, படித்து ஆட்சியராக வேண்டும் என்ற கனவோடு வாழும் பெண்ணின் கதையாக சுந்தரி தொடர் உள்ளது.

இதனிடையே, ஐஏஎஸ் தேர்வு எழுதி மாவட்ட ஆட்சியராக சுந்தரி(கேப்ரியல்லா) பொறுப்பேற்றுள்ளதாக முன்னோட்டக் காட்சியொன்று வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சுந்தரி தொடரின் முதல் பாகம் நிறைவடைந்து, 2 ஆம் பாகம் தொடங்கப்படவுள்ளது. அதில் கார்த்திகேயன் கதாபாத்திரத்தில் நடிகர் கிருஷ்ணா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

கிருஷ்ணா தெய்வ மகள் தொடரில் நடித்து பிரபலமானவர். இவர் தாலாட்டு, ரன், நாயகி, கண்ணான கண்ணே உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார்.

இது குறித்து கேப்ரியல்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'செல்ல கலெக்டர்' எனப் பதிவிட்டு புகைப்படம் ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com