தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

அசோக் செல்வனின் சபாநாயகன் டிரைலர்!

அசோக் செல்வன் நடிக்கும் சபா நாயகன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2023, 12:42 pm

அசோக் செல்வன் நடிக்கும் சபா நாயகன் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றி படங்களில் நடித்தவர்.

இவர் நடிப்பில் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் போன்ற திரைப்படங்கல் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

தற்போது சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் சபா நாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தினை அரவிந்த் ஜெயபாலன், ஐயப்பன் ஞானவேல், கேப்டன் மேகவான் இசைவானன் ஆகியோர் இணைந்து தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். 

இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இப்படம் வரும் டிச.15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சபா நாயகன் படத்தின் டிரைலர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.