சில்க் ஸ்மிதா தி அன்டோல்ட் ஸ்டோரி: வைரலாகும் போஸ்டர்! 

நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘சில்க் ஸ்மிதா தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. 
சில்க் ஸ்மிதா தி அன்டோல்ட் ஸ்டோரி: வைரலாகும் போஸ்டர்! 

தமிழ்த் திரையுலகின் துணிச்சலான பெண்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் சில்க் ஸ்மிதா. கவர்ச்சி வேஷங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை, இந்தியில் ‘டர்ட்டி பிக்சர்’ என்ற பெயரில் படமாக வெளியானது. சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் வித்யா பாலன் நடித்தார். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. சிறந்த ஒப்பனைக் கலைஞர் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் என மேலும் இரண்டு தேசிய விருதுகளையும் இந்தப் படம் பெற்றது. 

‘டர்ட்டி பிக்சர்: சில்க் சக்கத் ஹாட்’ என்ற பெயரில் கன்னடத்திலும் வெளியாகி, ஹிட் ஆனது. பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக், சில்க் வேடத்தில் நடித்தார். மேலும், மலையாளத்திலும் சனா கான் நடிப்பில் ‘க்ளைமாக்ஸ்’ என்ற பெயரில் படமாக வெளிவந்தது குறிப்பிடத்த்ககது. 

இந்நிலையில், நடிகை சந்திரிகா ரவி நடிப்பில் ‘சில்க் ஸ்மிதா தி அன்டோல்ட் ஸ்டோரி’ உருவாகியுள்ளது. 2018இல் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் அறிமுகமான சந்திரிகா ரவிக்கு ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அடுத்த ஆண்டில் மேலும் 3 தென்னிந்திய படங்களை முடிக்க போகிறார். ஜனவரி 2023இல் வெளியான அவரது மிகப்பெரிய படமான 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தில் மேலும் பிரபலமானார். 

‘சில்க் ஸ்மிதா தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தினை எஸ்டிஆர்ஐ சினிமா தயாரித்துள்ளது. ஜெயராம் இயக்கியுள்ளார். 2024இல் தமிழ்,  தெலங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் என பான் இந்திய்ப படமாக வெளியாக உள்ளது. 

இயக்குநர் ஜெயராம் தனுஷின் பிரெஞ்சுப் படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆஃப் பகிர் (பக்கிரி) படத்துக்கு தமிழ் வசனங்களை எழுதியுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com