இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

க்ரஷ்மிகா சங்கத்தில் நானும் இணைகிறேன்: ராஷ்மிகாவை புகழ்ந்த ஆலியா பட்! 

அனிமல் படத்தில் சிறப்பாக நடித்துள்ள ராஷ்மிகாவை ஆலியா பட் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். 

News image
Updated On :3 டிசம்பர் 2023, 12:16 pm IST

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர்,  ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம்  ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள். 

அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருக்கின்றன. 

Story image

இயக்குநரின் சொந்தத்  தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள்ள படத்தில் பிரபல நடிகர் சன்னி தியோலின் சகோதரரான பாபி தியோல்  வில்லனாக நடித்துள்ளார்.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளிலும்  டிச.1 உலகளவில் பிரம்மாண்டமாக இப்படம் வெளியானது.

Story image

படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் முதல் நாளில் ரூ.116 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

அனிமல் படம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட ஆலியா பட் ராஷ்மிகாவை புகழ்ந்து பேசியுள்ளார். அதில், “சந்தீப் வங்கா உங்களைப் போன்ற ஒரு இயக்குநரை பார்க்கவே முடியாது. படத்தில் வரும் பீட்ஸ் என்னை அதிர்ச்சி, மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பல நாள்களுக்கு முன்மாதிரியான காட்சிகளாக இருக்கும்.

Story image

ராஷ்மிகா மந்தனா நீங்கள் படத்தில் மிகவும் அழகாகவும் நேர்மையாகவும் இருந்தீர்கள். நேரில் சொல்லியதுபோல் அந்தக் காட்சியில் மிகவும் பிடித்திருந்தது. மிகவும் சிறப்பு வாய்ந்த காட்சியாகவும் ஊக்கமளிக்கும் விதமாகவும் இருந்தது. முழுமையாக க்ரஷ்மிகா சங்கத்தில் இணைகிறேன். 

பாபி தியோல் அனிமல் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தவாரக இருந்தார். எப்போது ஸ்கிரினில் வந்தாலும் ஒரு அற்புதம் நிகழ்கிறது” எனப் பாராட்டி பதிவிட்டிருந்தார். 

Story image

ராஷ்மிகாவை இந்தியாவின் நேஷ்னல் க்ரஷ் என்பார்கள். மேலும் ரசிகர்கள் இணையத்தில் க்ரஷ்மிகா எனவும் செல்லமாக அழைப்பது வழக்கம்.  பாலிவுட் நடிகை ஆலியா பட்டும் இந்த க்ரஷ்மிகாவை பயன்படுத்தியது ராஷ்மிகா ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.