கிரேக்க கடவுள் மாதிரி உள்ளீர்கள்: விஜய் பட நடிகரை புகழ்ந்த பிரபல இயக்குநர்!

பிரபல நடிகர் வித்யூத் ஜம்வால் பதிவிட்ட புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. 
கிரேக்க கடவுள் மாதிரி உள்ளீர்கள்: விஜய் பட நடிகரை புகழ்ந்த பிரபல இயக்குநர்!
Published on
Updated on
2 min read

ஜம்மு காஷ்மீரில் இராணுவ வீரருக்கு மகனாக பிறந்தவர் வித்யூத் ஜம்வால். தனது தந்தையின் வேலை காரணமாக நாடு முழுவதும் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கேரளாவின் களரிப்பயிற்று தற்காப்பு கலையை கற்றுத் தேர்ந்தார். தெலுங்குப் படத்தில் அறிமுகமானாலும் ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். 

தமிழில் பில்லா 2, துப்பாக்கி, அஞ்சான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.   விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து மிகவும் புகழ் பெற்றார். மிகவும் ஸ்டைலான வில்லன் எனப் பெயர் பெற்றார். 

இந்தாண்டு மே மாதம் வெளியான ‘ஐபி71’ என்ற ஹிந்திப் படம் நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

25க்கும் மேற்பட்ட நடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து சண்டைக் காட்சி நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். உடற்பயிற்சி, இயற்கை என மிகவும் தனித்துவமான வாழ்க்கை வாழ்பவர். 

“இமயமலையில் 7-10 நாள்கள் தனியாக இருப்பது என்னுடைய வாழ்வின் அங்கமாக இருக்கிறது” தனது நிர்வாண புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. 

இந்நிலையில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, உங்களுக்கு உள்ள மிருகத்தை இந்த முறை சரியாக வெளிக்கொணர்ந்துள்ளீர்கள். நீங்கள் பார்ப்பதற்கு கிரேக்க கடவுளைப் போலுள்ளீர்கள். இலட்சக்கணக்கான வணக்கங்கள் உங்களுக்கு” எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.