பாடல்கள் இசையமைப்பதில் ஆர்வமில்லை: இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா

பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தனக்கு பாடல்கள் இசையமைப்பதில் ஆர்வமில்லை எனக் கூறியுள்ளார். 
பாடல்கள் இசையமைப்பதில் ஆர்வமில்லை: இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா

அசுரவித்து (2013) எனும் படத்தின் மூலம் பின்னணி இசையமைப்பாளராக மலையாளத்தில் அறிமுகமானார் கோவிந்த் வசந்தா. தமிழில் சோலோ, 96, உரியடி-2 ஆகிய படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். குறிப்பாக த்ரிஷா, விஜய் சேதுபதி நடித்த 96 படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது.  

பல மலையாள படங்களுக்கு பின்னணி இசை மட்டுமே அமைத்துள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் வழங்கும் உறியடி விஜய் குமார் நடித்துள்ள ஃபைட் கிளப் படத்துக்கும் கோவிந்த் வசந்தாதான் இசையமைப்பாளர். 

ஃபைட் கிளப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், “எனக்கு பாடல்கள் இசையமைப்பதில் ஆர்வமில்லை. பின்னணி இசையமைப்பது மட்டுமே எனக்கு மிகவும் பிடித்தமானது. சர்வைவலுக்காக பாடல்களை இசையமைக்கிறேன். பின்னணி இசைதான் படத்துக்கு ஆன்மா. பின்னணி இசையால் ஒரு படத்தினை காப்பாற்றவும் முடியும் கொலை செய்யவும் முடியும். பாடல்களே இல்லாமல் படத்துக்கு இசையமைக்க மிகவும் விருப்பம் உள்ளது” எனக் கூறியுள்ளார். 

ஃபைட் கிளப் படத்தின் டீசரில் இளையராஜாவின் பாடல் ஒன்றினை மிகவும் அற்புதமாக  ரீமேக் செய்திருப்பார். ரசிகர்கள் பலரும் அந்த பின்னணி இசையை மட்டுமே சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்திருந்தனர். 

அடுத்து வெளிவரவுள்ள ப்ளூ ஸ்டார் படத்துக்கும் கோவிந்த் வசந்தா இசையமைப்பளாரக இருக்கிறார். இந்தப் படத்தின் ரயிலின் ஓசைகள் எனும் பாடல் இன்ஸ்டாவில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com