ரஜினி - 170 படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் பெயரைப் படக்குழு அறிவித்துள்ளது.
ரஜினி - 170 படத்தின் பெயர் அறிவிப்பு!

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இசை - அனிருத்.

இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாஸில், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இன்று ரஜினியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் பெயரை அறிவித்துள்ளனர்.

இப்படத்திற்கு வேட்டையன் எனப் பெயரிட்டுள்ளனர், நடிகர் ரஜினிக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com