
மிக்ஜம் புயல் மீட்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.6 லட்சத்துக்கான கசோலையை அமைச்சர் உதயநிதியிடம் நடிகர் வடிவேலு வழங்கினார்.
மிக்ஜம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். தன்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாகவும் அனைத்து சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறும் கூறியிருந்தார்.
அதன்படி பல்வேறு கட்சிகளின் சார்பிலும் மேலும் கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் நிதி வழங்கி வருகின்றனர். மேலும் தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள் பலரும் புயல் மீட்புப் பணிகளுக்காக நிதி அளித்து வருகின்றனர்.
அந்தவகையில், மிக்ஜம் புயல் மீட்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.6 லட்சத்துக்கான கசோலையை அமைச்சர் உதயநிதியிடம் நடிகர் வடிவேலு இன்று வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.