மலைக்கோட்டை வாலிபன் முதல் பாடல்!
மலையாளத்தில் சிறந்த கதைக்களங்களில் திரைப்படங்களை உருவாக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி. இவரது ஜல்லிக்கட்டு படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருந்தது.
இறுதியாக வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படமும் விமர்சன ரீதியில் பாராட்டுக்களைப் பெற்றது.
தற்போது, நடிகர் மோகன் லாலை வைத்து ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தை இயக்கி வருகிறார். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மதுநீலகண்டன் ஒளிப்பதிவு செய்ய பிரசாந்த் பிள்ளை இசையமைக்கிறார்.
இதையும் படிக்க: விடாமுயற்சி - அஜித் எடுத்த புகைப்படங்கள்!
மலைக்கோட்டை வாலிபன் படத்தின் டீசரை வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் முதல் பாடலான ‘புன்னாரா காட்டிலே பூவனத்தில்’ பாடலைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அடுத்தாண்டு (2024) பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.