
லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர். பின்னர் கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய்யின் லியோ படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது, லோகேஷ் ‘தலைவர் 171’ படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக அவரே தெரிவித்திருந்தார்.
இவரது 'ஜி ஸ்குவாட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளிவந்துள்ள 'ஃபைட் கிளப்' திரைப்படத்திற்கு ஆதரவளித்தவர்களுக்கு லோகேசஷ நன்றி தெரிவித்தார். அனைத்து சமூக வலைத்தளங்களிலிருந்தும் சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
நேர்காணல் ஒன்றில் லோகேஷ் கனகராஜ், “ஓய்வெடுக்க 30 நாள்கள் சென்றிருந்தேன். ஆனால் சும்மா இருக்க முடியவில்லை. அதனால் ஒரு குறும்படம் இயக்கியுள்ளேன். விரைவில் வெளியாக உள்ளது. ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.
இது எல்சியூ குறித்த குறும்படமாக இருக்குமென சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.