32 நாள்களில் படப்பிடிப்பினை முடித்த சீனு ராமசாமி!

சீனு ராமசாமி இயக்கும் 'கோழிப் பண்ணை செல்லதுரை' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
32 நாள்களில் படப்பிடிப்பினை முடித்த சீனு ராமசாமி!

தமிழில் தனித்துவமான இயக்குநர் சீனு ராமசாமி. 2010இல் இவர் இயக்கிய தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

நீர்ப்பறவை, கண்ணே கலைமானே, தர்மதுரை, மாமனிதன் படங்களை இயக்கியுள்ளார். அடிதடி கமர்ஷியல் சினிமாவுக்குள் சிக்கிக் கொள்ளாமல் மனித உணர்வுகளை பிரதானமாக்கி படங்களை இயக்குவதில் ஆர்வம் உடையவர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் இறுதியாக வெளியான ‘மாமனிதன்’ விமர்சகர்களிடையே நல்ல பெயரைப் பெற்றது. 

சீனு ராமசாமி அடுத்ததாகக் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ என்கிற பெயரில் புதிய படத்தை இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். 

கடந்த 31 நாள்களாக தேனி ஆண்டிப்பட்டியில் தொடங்கி நடைப்பெற்ற இயக்குநர் சீனுராமசாமியின் கோழிப்பண்ணை செல்லத்துரை  படப்பிடிப்பு தொடர்ந்து பெரியகுளம், வைகை அணை,வடுகப்பட்டி, கோடாங்கிப்பட்டி,  என நடைபெற்று வந்தது.

நவம்பர் 24 மாலை  ஆண்டிப்பட்டி உழவர்சந்தை முன்பு, படத்தில் பங்குப்பெற்ற கதாநாயகன் ஏகன், கதாநாயகி பிரிகடா, கொட்டாச்சி மற்றும் கலைஞர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் முன்னிலையில் இயக்குநர் சீனுராமசாமி கேக் வெட்டி படப்பிடிப்பை நிறைவு செய்தார்.

திரையரங்கில் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜோ படத்தை தயாரித்த டாக்டர் அருளானந்து கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இயக்குநர் சீனு ராமசாமி கோழிப்பண்ணை செல்லதுரை படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்ததாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

நவம்பர் 23ஆம் நாள் தொடங்கிய படப்பிடிப்பு டிச.24ஆம் தேதிக்குள் முடித்துள்ளார்கள். அதாவது 32 நாள்களுக்குள் படப்பிடிப்பினை முடித்துள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com