பிக் பாஸ் 7: நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் முதல் போட்டியாளர் யார்?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் முதல் போட்டியாளர் குறித்த  தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் 7: நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் முதல் போட்டியாளர் யார்?
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், நேரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் முதல் போட்டியாளர் குறித்த  தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 10-வது வாரத்தை எட்டியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து 7-வது முறையாக தொகுத்து வழங்கி வருகிறார். 

பிக் பாஸ் சீசன் 7 விஜய் தொலைக்காட்சியில் அக். 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

மேலும், போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.

இவர்களில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களில் இருந்து இருவர் மீண்டும் வைல்டு கார்டாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இருவர் மீண்டும் வைல்டு கார்டாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். சென்ற வாரம் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில்,  சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சுற்றுகளாக இப்போட்டி நடைபெற்று வருகிறது. கடைசி சுற்று போட்டியில் இருந்து நிக்ஸன் வெளியேறுவதாக இன்று வெளியான ப்ரோமோவில் காட்டப்பட்டது. 

இந்த நிலையில், முன்னதாக 7 புள்ளிகளைப் பெற்றிருந்த விஷ்ணு, இந்த சுற்றில் வெற்றி பெற்று மேலும் 3 புள்ளிகளை பெற்று மொத்தம் 10 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிக புள்ளிகளைப் பெற்றுள்ள விஷ்ணு, டிக்கெட் டீ ஃபினாலே போட்டியை வென்று நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.