நடிகர் லியோ பிரபு காலமானார்

நடிகர் லியோ பிரபு காலமானார். அவருக்கு வயது 90. தனது மனைவி உஷா, மகள் முருக சங்கரி ஆகியோருடன் மதுரை அண்ணாநகரில் வசித்து வந்துள்ளார். 
நடிகர் லியோ பிரபு காலமானார்
Published on
Updated on
1 min read

சென்னை: நடிகர் லியோ பிரபு காலமானார். அவருக்கு வயது 90. தனது மனைவி உஷா, மகள் முருக சங்கரி ஆகியோருடன் மதுரை அண்ணாநகரில் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் இன்று மாலை 6 மணி அளவில் காலமானார்.

பருவகாலம், இது எங்க நாடு, அண்ணே அண்ணே, நான் மகான் அல்ல, புதிர், பேர் சொல்லும் பிள்ளை, ரெண்டும் ரெண்டும் அஞ்சு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த அவர் ஒரு மூத்த நாடக ஆசிரியர், எழுத்தாளர். புகழ்பெற்ற பாய்ஸ் நடக நிறுவனத்தில் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். எஸ்.வி.சகஸ்ரநாமம் போன்ற தமிழ் நாடகவியல் மேதைகளுடன் சேவா ஸ்டேஜ், ஒய். ஜி. பார்த்தசாரதி, பிரபு போன்றவர்களுடன் பல ஆண்டுகள் நாடகத் துறையில் பயணித்தவர். பின்னர் தனது சொந்த நாடகக் குழுவான ஸ்டேஜ் இமேஜை நிறுவி பல நாடகங்கள் அரங்கேற்றியுள்ளார். அத்துடன் பல தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்துள்ளார்.

இவரது கலைச்சேவையை கௌரவிக்கும் வகையில் 1990ஆம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி பாராட்டியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com