'பாரதி கண்ணம்மா' தொடரில் 'பிக்பாஸ்' ஷிவின்! புதிய திருப்பம்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொண்ட ஷிவின் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
'பாரதி கண்ணம்மா' தொடரில் 'பிக்பாஸ்' ஷிவின்! புதிய திருப்பம்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் பிக்பாஸ் சீசன் 6-ல் கலந்துகொண்ட ஷிவின் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் மூன்றாவது இடத்தை ஷிவின் பிடித்தார். வெற்றியாளராக அஸீம் அறிவிக்கப்பட்டார்.

பிக்பாஸ் சீசன் 6 வெற்றியாளராக ஷிவின் வருவார் என அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். திருநங்கையான ஷிவின் வெற்றிகரமான தொழிலதிபராகவே உள்ளார். எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு திரைத்துறையில் பல்வேறு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் அவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதி கண்ணம்மா தொடர் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்படும் நிலையில், அதன் இறுதிக்கட்ட காட்சிகளில் ஷிவின் நடிப்பார் என கூறப்படுகிறது.

இதனால் சிறப்புத் தோற்றத்தில் அவர் நடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தனது இன்ஸ்டாகிராம் (ஸ்டோரி) பக்கத்திலும் புகைப்படத்தை பதிவிட்டு பாரதி கண்ணம்மா தொடரில்  நடிப்பது போன்ற வரிகளையும் இணைத்துள்ளார்.

ஷிவினின் பன்முகத்தன்மை

ஷிவின் விளம்பர மாடலாகவும், தொழிலதிபராகவும் மட்டுமல்லாமல், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும், பொருளாதார விளிம்பு நிலையிலுள்ள மாணவர்களுக்கும் அடிப்படைக் கல்வியறிவை வழங்கும் தன்னார்வலராகவும் செயல்பட்டு வருகிறார். பாலினம் தொடர்பாக சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். 

பால்புதுமை சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பாலின மாறுபாட்டால் இறுக்கமான சூழலை சந்திக்கும் மனிதர்களுக்கு இயல்பான வாழ்க்கையை அமைத்துத்தருவதே தனது லட்சியம் என அவர் அவ்வபோது குறிப்பிடுவதுண்டு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com