வெளியானது ‘வாத்தி’ டிரைலர்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான வாத்தி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
வெளியானது ‘வாத்தி’ டிரைலர்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான வாத்தி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' படங்களுக்கு பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் 'வாத்தி' படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  

'வாத்தி' திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. 

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில், இன்று இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com