அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர்
/

‘இந்தியன் 2’ புகைப்படத்தைப் பகிர்ந்த ஷங்கர்!

இந்தியன் - 2 படப்பிடிப்பு புகைப்படத்தை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2023, 9:30 am

DIN

இந்தியன் - 2 படப்பிடிப்பு புகைப்படத்தை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்றது. கமலின் ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தற்போது ‘இந்தியன் 2’ படத்தை மீண்டும் தொடங்கியுள்ளனர். 

ஜெயமோகன் எழுத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் ரவி வர்மா, ரத்னவேலு ஒளிப்பதிவில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

இப்படத்தின் பிளாஷ்ஃபேக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு பிகாரில் சமீபத்தில் நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து, இந்தியன் - 2 படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று முடிந்தது.

மேலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் 30 நாள்கள் நடைபெற உள்ளதால் பிரசாத் ஸ்டூடியோவில் இப்படத்திற்கான பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது.

Story image

இந்நிலையில், அதனைக் குறிப்பிடும் விதமாக இயக்குநர் ஷங்கர் தன்  டிவிட்டர் பக்கத்தில், ‘மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில்..’ என புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.