நடிகர் மயில்சாமி காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானார். 
நடிகர் மயில்சாமி காலமானார்
Published on
Updated on
1 min read

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானார். 

நேற்று இரவு சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. இந்த தகவலை மயில்சாமியின் மகன் அன்பு மயில்சாமி உறுதிப்படுத்தி உள்ளார்.

மிமிக்ரி கலைஞராக இருந்து தமிழ் சினிமாவில் முக்கிய நகைச்சுவை நடிகரானவர் நடிகர் மயில்சாமி(57). தாவணிக் கனவுகள், கன்னி ராசி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் கமலின் அபூர்வ சகோதரர்கள் படத்தில் மெக்கானிக் கமலின் நண்பராக ஒருவராக நடித்து வெளிச்சம் பெற்றார்.  அதன்பின் நூற்றுக்கணக்கான படங்களில் காமெடி பாத்திரங்களில் நடித்து அசத்தினார். 

ரஜினி, கமல் தொடங்கி இன்றைய இளம் நடிகர்கள் வரை ஏராளமான நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். கடைசியாக தான் நடித்த கிளாஸ்மேட்ஸ் படத்தின் டப்பிங் பணியைக் கூட முடித்துவிட்டு வந்தார். இவரது மகன்களான அன்பு மயில்சாமி, யுவன் மயில்சாமி இருவரும் நடிகர்களாக உள்ளனர். ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை பெற்றுள்ள இவருக்கு கடந்த டிசம்பரில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். 

இந்நிலையில் இவரின் திடீர் மறைவு திரையுலகினர், ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மயில்சாமியின் உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலுக்கு நடிகர்கள் பார்த்திபன், எம்.எஸ்.பாஸ்கர், மனேபாலா, போண்டா மணி, டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவர் மயில்சாமி. நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சிறந்த குணச்சித்திர வேடங்களிலும் மயில்சாமி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com