‘மதம் என்பது சுரண்டல் தன்மையுடையது...’- இயக்குநர் ராஜமௌலியின் வைரலாகும் கருத்து!

ஆர்ஆர்ஆர் படத்தின் இயக்குநர் ராஜமௌலி மதம் பற்றி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
‘மதம் என்பது சுரண்டல் தன்மையுடையது...’- இயக்குநர் ராஜமௌலியின் வைரலாகும் கருத்து!
Published on
Updated on
1 min read

இயக்குநா் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளியானது.

நடிகா்கள் ராம் சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

மேலும், இந்தத் திரைப்படம் ஆஸ்கா் விருதுக்கான பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பித்திருந்த நிலையில், ‘ஒரிஜினல் பாடல்’ என்ற விருதின் பிரிவில் 5 பாடல்களில் ஒன்றாக நாட்டுக் கூத்து பாடலும் இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது.

ராஜமௌலி ‘தி நியூயார்க்கர்’ பத்திரிகைக்கு நீண்ட பேட்டியளித்துள்ளார். அதில், ’மதம்' குறித்தும் ‘கடவுள் நம்பிக்கை’ பேசியுள்ளாது வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியதாவது: 

எனக்கும் கடவுள் நம்பிக்கையில்லை. ஆனால் என்னுடைய கருத்தை படத்தில் திணிக்க விரும்பமாட்டேன். சினிமா வணிக ரீதியிலானது. மக்கள் விரும்புகிறார்கள் அதனால் அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன். அது என் வேலை அவ்வளவே. நான் கடவுள் நம்பிக்கையற்றவன். இதனால் என்னை எனது தந்தைக்கூட என்னை திட்டியுள்ளார். ஆனால் தற்போது நான் வாழும் வாழ்க்கை முறையை பார்த்து நிம்மதியாக இருக்கிறார். 

எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள். நான் சிறுவயதில் உள்ளபோது இந்து கடவுள்கள் குறித்து படிக்கும்போது நம்பும்படியாக தெரியவில்லை. பிறகு எனது குடும்பத்தின் தீவிரமான போக்கினால் மதம் குறித்த நூல்கள் படித்தேன்; யாத்திரை சென்றுள்ளேன். சன்னியாசி போல் உடையணிந்து சில வருடங்கள் வாழ்ந்துள்ளேன். சில நண்பர்களால் கிறிஸ்துவத்தையும் அறிந்தேன். பைபிள் படித்துள்ளேன். பிறகு மெல்ல மெல்ல இதெல்லாம் எனக்கு மதம் என்பது சுரண்டல் தன்மையுடையது என உணர்த்தியது. பிறகு அயன் ராண்டின் புத்தகங்கள் படித்துள்ளேன். அது என்னை வெகுவாக பாதித்தது. அந்த நேரத்தில்தான் நான் மதத்தினை விட்டு வெளியேற ஆரம்பித்தேன் என நினைக்கிறேன். ஆனாலும் அப்போதும் ராமாயணம், மகாபாரதம் கதைகள் மீதான எனது காதல் குறையவில்லை. 

மதம் ரீதியில் அதை அணுகாமால், கதை சொல்லல் முறை அந்த கதை எழுதப்பட்டிருக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.