
சத்குரு ஜக்கி வாசுதேவ் குறித்து பிரபல நடிகை வர்ஷினி செளந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் பலர் விரும்பம் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு திரையுலகில், 'சந்தமாமா கதலு' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். இந்த படத்தில் கிடைத்த வரவேற்பால் ரசிகர்கள் மத்தியில் இடம் பெற்ற அவர், 'லவ்வர்ஸ்', 'கை ராஜா கை', 'ஸ்ரீ ராம ரக்ஷா' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் சின்னத் திரையில் கோலோச்சிய வர்ஷினி, பெல்லி கோலா என்ற குறுந்தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால், அதிக அளவிலான ரசிகளைப் பெற்றார்.
தெலுங்கு திரையுலகில் பணிபுரிந்து வரும் தமிழ்ப் பெண்ணான இவர், கோவையில் நடைபெற்ற மஹாசிவராத்திரி விழாவில் கலந்துகொண்டுள்ளார். அங்கு ஜக்கி வாசுதேவ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, கனவு நிஜமானது. அன்புள்ள சத்குரு உங்களைப் பார்ப்பதோடு மட்டும் அல்லாமல் தொட்டுப் பார்க்க வேண்டும் எனக் கனவு கண்டுள்ளேன். அந்தக் கனவை நிறைவேற்றியதற்கு நன்றி. என் வாழ்க்கையில் நீங்கள் மிகமுக்கிய பங்காற்றியுள்ளீர்கள். என் மீது காட்டிய உங்கள் அன்புக்கு நன்றி. ஹரஹர மகாதேவ் எனப் பதிவிட்டுள்ளார்.
வர்ஷினி செளந்தரராஜன் ஈஷா யோகா மைய புரமோஷன் பணிகளிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.