’விநோதய சித்தம்’ தெலுங்கு ரீமேக் துவக்கம்

தமிழில் வரவேற்பைப் பெற்ற விநோதய சித்தம் படத்தின் தெலுங்கு ரீமேக் துவங்கியுள்ளது.
’விநோதய சித்தம்’ தெலுங்கு ரீமேக் துவக்கம்

தமிழில் வரவேற்பைப் பெற்ற விநோதய சித்தம் படத்தின் தெலுங்கு ரீமேக் துவங்கியுள்ளது.

தமிழில் சமுத்திரக்கனி நடிப்பில் நேரடியாக ஜி5 ஓடிடி தளத்தில் வெளியான படம் விநோதய சித்தம். விமர்சன ரீதியாக இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து சமுத்திரக்கனி ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ​

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. சமுத்திரக்கனி இயக்கும் இந்தப் படத்தில் பவன் கல்யாணுடன் அவரது சகோதரி மகனும் நடிகருமான சாய் தரம் தேஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

விநோதய சித்தம் திரைப்படம் உயிரிழந்த ஒருவர் தனக்கு சில கடமைகள் இருப்பதாகக் கடவுளிடம் அனுமதிவாங்கி மீண்டும் உயிர் பெற்றுவருவது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். தெலுங்கில் சமுத்திரக்கனி வேடத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா வேடத்தில் சாய் தரம் தேஜும் நடிக்கவிருக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com