திருமண விழாவில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆட்டம்போட்ட பாகிஸ்தான் நடிகை!

திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீர் ஆர்ஆர்ஆர் படத்தின் பாடலான "நாட்டு நாட்டு" பாடலுக்கு நடனமாடி விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 
திருமண விழாவில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆட்டம்போட்ட பாகிஸ்தான் நடிகை!


திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீர் ஆர்ஆர்ஆர் படத்தின் பாடலான "நாட்டு நாட்டு" பாடலுக்கு நடனமாடி விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

ஆர்ஆர்ஆர் படம் கடந்தாண்டு மார்ச் 25 அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியானது. 

பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் படத்தை எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கினார். ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரித்தது. முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடித்தார்கள். பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடித்தார்கள். 

உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்தது. ஆர்ஆர்ஆர் 2-ம் பாகத்தின் கதையைத் தனது தந்தை விஜயேந்திர பிரசாத் எழுதி வருவதாகக் கடந்த செப்டம்பர் மாதம் உறுதி செய்தார் இயக்குநர் ராஜமெளலி. 

இந்நிலையில், கோல்டன் குளோப் விருதுக்கு பிறகு 'நாட்டு நாட்டு' பாடல் சர்வதேச அளவில் பிரபலமடைந்துள்ளது. வெளிநாட்டினர் பலரும் இந்த பாடலை ரசித்துவரும் காட்சிகள் வெளியாகி வருகிறது. 

அந்தவகையில், பாகிஸ்தான் நடிகை ஹனியா அமீரின் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடும் விடியோ சமீபத்தில் வைரலானது. ஹனியாவுடன் மற்றொரு நடிகர் சபூர் அலியும் கலந்துகொண்டு திருமண கொண்டாட்டத்தில் இருந்து விடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

ஷராரா உடையணிந்த ஹனியா, பாடலின் உற்சாகமான ஹூக் ஸ்டெப்களுக்கு ஏற்றவாறு வெள்ளை நிற ஸ்னீக்கர்களை அணிந்திருந்தார். ஹனியா தனது இன்ஸ்டாகிராமில் தனது நடனத்தின் பல விடியோக்களை பகிர்ந்துள்ளார்.

இந்த பாடல் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com