வெளியானது பஹீரா படத்திலிருந்து ‘குச் குச் ஹோதா ஹை’ பாடல்! 

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பஹீரா’ படத்திலிருந்து ‘குச் குச் ஹோதா ஹை’ எனும் பாடல் வெளியாகியுள்ளது. 
வெளியானது பஹீரா படத்திலிருந்து ‘குச் குச் ஹோதா ஹை’ பாடல்! 

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக பிரபு தேவாவை வைத்து இயக்கியுள்ள படம் ‘பஹீரா’. இந்தப் படத்தின் முதலாவது டிரெய்லர் கடந்தாண்டு வெளியாகி சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. 

இந்தப் படத்தில் அமைரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி, சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேசன் சேகர் இசையமைத்துள்ளார். 

இந்தப் படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. சமீபத்தில் இந்தப் படத்தின் 2வது டிரைலர் வெளியாகி படத்தில் வரும் வசனங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து தமன் பாடிய ‘குச் குச் ஹோதா ஹை’ எனும் பாடல் வெளியாகியுள்ளது. ரோஹேஷ், ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் பாடலை எழுதியுள்ளனர். 

‘பஹீரா’ திரைப்படம் வருகிற மார்ச் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com