

நடிகர் கார்த்தி நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து ட்ரீம் வாரியர் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். இது கார்த்தியின் 25-வது படமாகும்.
இதற்குப் பின், ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.